குறள் 1321-1330

அதிகாரம் : ஊடலுவகை பால்: காமத்துப்பால் குறள் 1321: இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல் வல்லது அவர்அளிக்கு மாறு. விளக்கம் 1: அவரிடம் தவறு ஒன்றும் இல்லையானலும், அவரோடு ஊடுதல், அவர் நம்மேல் மிகுதியாக அன்பு செலுத்துமாறு செய்ய வல்லது. விளக்கம் 2: அவரிடம் தவறே இல்லை என்றாலும், அவர் என்னிடம் மிகுந்த அன்பைச் செலுத்தும்படி செய்யவல்லது ஊடல். குறள் 1322: ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி வாடினும் பாடு பெறும். விளக்கம் 1: ஊடுதலால் உண்டாகின்ற […]

Continue Reading

குறள் 1311-1320

அதிகாரம் : புலவி நுணுக்கம் பால்: காமத்துப்பால் குறள் 1311: பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர் நண்ணேன் பரத்தநின் மார்பு. விளக்கம் 1: பரத்தமை உடையாய்! பெண் தன்மை உடையவர் எல்லாரும் தம்தம் கண்களால் பொதுப் பொருளாகக் கொண்டு நுகர்கின்றார்கள்; ஆகையால் உன் மார்பைப் பொருந்தேன். விளக்கம் 2: பெண் விரும்பியே! நீ வீதி வழி வரும் குணங்கெட்ட பெண்கள் எல்லாரும் உன் மார்பைத் தம் கண்ணால் பொதுவாக உண்பர்; அதனால் அவர்களின் எச்சிலாகிய உன் மார்பை […]

Continue Reading

குறள் 1301-1310

அதிகாரம் : புலவி பால்: காமத்துப்பால் குறள் 1301: புல்லா திராஅப் புலத்தை அவர்உறும் அல்லல்நோய் காண்கம் சிறிது. விளக்கம் 1: ( ஊடும்போது அவர் அடைகின்ற) துன்ப நோயைச் சிறிது காண்போம்; அதற்காக அவரைத் தழுவாமலிருந்து பிணங்குவாயாக. விளக்கம் 2: நாம் ஊடும்போது அவர் அடையும் காதல் வேதனையை நாமும் கொஞ்சம் பார்க்கலாம்; அதனால் அவரைத் தழுவாதே; ஊடல் செய். குறள் 1302: உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல். விளக்கம் 1: […]

Continue Reading

குறள் 1291-1300

அதிகாரம் : நெஞ்சொடுபுலத்தல் பால்: காமத்துப்பால் குறள் 1291: அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே நீஎமக்கு ஆகா தது. விளக்கம் 1: நெஞ்சே! அவருடைய நெஞ்சம் ( நம்மை நினையாமல் நம்மிடம் வராமல்) அவர்க்குத் துணையாதலைக் கண்டும் நீ எமக்குத் துணையாகாதது ஏன்?. விளக்கம் 2: நெஞ்சே! அவருடைய நெஞ்சு நம்மை எண்ணாது அவருக்கே துணையாய் நிற்பதை அறிந்தும், நீ எனக்குத் துணை ஆகாமல் அவரையே நினைக்கக் காரணம் என்ன?. குறள் 1292: உறாஅ தவர்க்கண்ட கண்ணும் […]

Continue Reading

குறள் 1281-1290

அதிகாரம் : புணர்ச்சிவிதும்பல் பால்: காமத்துப்பால் குறள் 1281: உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்திற் குண்டு. விளக்கம் 1: நினைத்த அளவிலே களிப்படைதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி அடைதலும் ஆகிய இந்த இருவகை தன்மையும் கள்ளுக்கு இல்‌லை; காமத்திற்கு உண்டு. விளக்கம் 2: நினைத்த அளவிலே உணர்வு அழியாமல் உள்ளம் கிளர்தலும், பார்த்த அளவிலே உணர்வு அழிய உள்ளம் கிளர்தலும் கள் உண்பவர்க்கு இல்லை; காதல் வசப்பட்டவர்க்கே உண்டு. குறள் 1282: தினைத்துணையும் ஊடாமை […]

Continue Reading

குறள் 1271-1280

அதிகாரம் : குறிப்பறிவுறுத்தல் பால்: காமத்துப்பால் குறள் 1271: கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண் உரைக்கல் உறுவதொன் றுண்டு. விளக்கம் 1: நீ சொல்லாமல் மறைத்தாலும் நிற்காமல் உன்னைக் கடந்து உன்னுடைய கண்கள் எனக்குச் சொல்லக் கூடிய செய்தி ஒன்று இருக்கிறது. விளக்கம் 2: நீ சொல்லாது மறைத்தாலும், மறைக்க உடன்படாமல், உன் மை தீட்டப் பெற்ற கண்களே எனக்குச் சொல்ல விரும்பும் செய்தி ஒன்று உண்டு. குறள் 1272: கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப் பெண்நிறைந்த […]

Continue Reading

குறள் 1261-1270

அதிகாரம் : அவர்வயின்விதும்பல் பால்: காமத்துப்பால் குறள் 1261: வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற நாளொற்றித் தேய்ந்த விரல். விளக்கம் 1: என் கண்களும் அவர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து ஒளி இழந்து அழகு கெட்டன; விரல்களும் அவர் சென்ற நாட்களைக் குறித்துத் தொட்டுத் தொட்டுத் தேய்ந்தன. விளக்கம் 2: அவர் என்னைப் பிரிந்து போன நாள்களைச் சுவரில் குறித்துத் தொட்டு எண்ணுவதால் என் விரல்கள் தேய்ந்து விட்டன; அவர் வரும் வழியைப் பார்த்து என் […]

Continue Reading

குறள் 1251-1260

அதிகாரம் : நிறையழிதல் பால்: காமத்துப்பால் குறள் 1251: காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும் நாணுத்தாழ் வீழ்த்த கதவு. விளக்கம் 1: நாணம் என்னும் தாழ்ப்பாள் பொருந்திய நிறை என்று சொல்லப்படும் கதவை காமம் ஆகிய கோடாலி உடைத்து விடுகிறதே. விளக்கம் 2: நாணம் என்னும் தாழ்பாளைக் கோத்திருக்கும் நிறை எனப்படும் கதவைக் காதல் விருப்பமாகிய கோடரி பிளக்கின்றதே!. குறள் 1252: காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில். விளக்கம் 1: காமம் என்று […]

Continue Reading

குறள் 1241-1250

அதிகாரம் : நெஞ்சொடுகிளத்தல் பால்: காமத்துப்பால் குறள் 1241: நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும் எவ்வநோய் தீர்க்கும் மருந்து. விளக்கம் 1: நெஞ்சே! ( காதலால் வளர்ந்த) இத் துன்ப நோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை நீ நினைத்துப் பார்த்து எனக்குச் சொல்ல மாட்டாயோ?. விளக்கம் 2: நெஞ்சே! எதனாலும் தீராத என் நோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை எண்ணிப் பார்த்துச் சொல்லமாட்டாயா?. குறள் 1242: காதல் அவரிலர் ஆகநீ நோவது பேதைமை வாழியென் […]

Continue Reading

குறள் 1231-1240

அதிகாரம் : உறுப்புநலனழிதல் பால்: காமத்துப்பால் குறள் 1231: சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி நறுமலர் நாணின கண். விளக்கம் 1: இத்துன்பத்தை நமக்கு விட்டு விட்டுத் தொலைவில் உள்ள நாட்டுக்குச் சென்ற காதலரை நினைந்து அழுதமையால் கண்கள் அழகு இழந்து நறுமலர்களுக்கு நாணி விட்டன. விளக்கம் 2: பிரிவைப் பொறுக்காத சிறுமை என்னோடு இருக்கப் பிரிவைப் பொறுத்துக் கொண்டு தொலைவில் சென்று அவரை எண்ணி அழுவதால், கண்கள் ஒளி இழந்துவிட்டன. முன்பு கண்களைக் கண்டு வெட்கப்பட்ட […]

Continue Reading